December 12, 2024
தேசியம்
செய்திகள்

பயிற்சிப் பயணத்தின் போது உலங்குவானூர்தி விபத்து – இரண்டு கனடிய விமானப்படையினர் மரணம்?

செவ்வாய்கிழமை (20) அதிகாலை Ottawa ஆற்றில் உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் இரண்டு கனடிய விமானப்படை உறுப்பினர்கள் மரணமடைந்தனர்.

பிரதமர் Justin Trudeau செவ்வாய் மாலை இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இந்தச் சம்பவம் செவ்வாய் அதிகாலை 12.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CH-147 Chinook உலங்குவானூர்தி பயிற்சிப் பயணத்தின் போது தண்ணீரில் விழுந்து நொறுங்கியதை தேசிய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது.

விபத்தின் போது உலங்குவானூர்தியில் இருந்த நான்கு பேர் கொண்ட மொத்தக் குழுவினரில் பலியான பணியாளர்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்கள் அவசர உதவி பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு Pembroke மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய தேடல், மீட்பு முயற்சிகள் தொடர்வதாக தேசிய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் Justin Trudeau, Ontario பிரதமர் Doug Ford ஆகியோர் அதிர்ச்சி தெரிவித்தனர்.

Related posts

திங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்!

Gaya Raja

தொற்றின் பாதிப்புகளுக்கு சமூக வெளிப்பாடு தொடர்ந்து முக்கிய காரணி

Lankathas Pathmanathan

வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை: CRA

Lankathas Pathmanathan

Leave a Comment