எதிர்வரும் ஆண்டுகளில் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா தொடர்ந்து வெளிநாட்டுக் தீயணைப்பு படையினரின் உதவியை நாடும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்திற்கு எதிரான கனடாவின் போராட்டத்தில் வெளிநாட்டு தீயணைப்பு படையினரின் தொடர்ந்தும் உதவி வரும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
ஏனைய நாடுகள் கனேடிய தீயணைப்பு படையினரின் உதவியை எதிர்பார்ப்பதை போல, கனடா ஏனைய நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் என பிரதமர் கூறினார்.
தற்போது நாடளாவிய ரீதியில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,000 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (14) காலை வரை கனடா முழுவதும் தற்போது 459 காட்டுத் தீ எரிந்து வருகிறது.
Quebecகில் 2,800 பேர் காட்டுத்தீ காரணமாக தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Albertaவில் 14 ஆயிரம் பேர் தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
British Colombiaவில் காட்டுத்தீயை எதிர்த்து போரிடுவதற்கான செலவு இந்த ஆண்டு இதுவரை 100 மில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது.