December 12, 2024
தேசியம்
செய்திகள்

இங்கிலாந்து வாகன விபத்தில் கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் மரணம்

இங்கிலாந்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் கனடாவை சேர்ந்த இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் மரணமடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை (10) மாலை இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் West Sussex பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதுண்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த இரண்டு கனடிய பெண்கள் உட்பட நால்வர் பயணித்த BMW வாகனத்தில் இருந்த மூவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கனடிய தமிழர்கள் சுபத்திரா இளங்கோ, அவரது 25 வயதான மகள் அஷ்மிதா இளங்கோ என தெரியவருகிறது.

இவர்களுடன் வாகனத்தில் பயணித்த சுபத்திராவின் மகன் நவீன் இளங்கோ படுகாயங்களுடன் உயிர் தப்பியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார்.

பலியானவர்கள் இலங்கையில் ஊரெழுவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

Related posts

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja

Fiona புயல் பதில் நடவடிக்கை குறித்த விசாரணைக்கு அழைப்பு

Lankathas Pathmanathan

Ontario மாகாண தேர்தலில் ஆறு தமிழர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment