தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளர் கைது!

Toronto நகர முதல்வர் வேட்பாளர் ஒருவர் கொலை மிரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

வேட்பாளர் Chris Saccoccia செவ்வாய்க்கிழமை (13) கைது செய்யப்பட்டதை Toronto காவல்துறையினர் உறுதிபடுத்தினர்.

மரண அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நகர முதல்வர் தேர்தல் பிரச்சாரத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில் கருத்து கணிப்புக்களில் Olivia Chow தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளார்.

திங்கட்கிழமை (12) வெளியான கருத்துக் கணிப்பில் Olivia Chow 35 சதவீத ஆதரவை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (13) நிறைவடைந்தது.

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related posts

Trudeau – Biden முதல் சந்திப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் வீட்டு வசதி திட்ட நிதியின் கீழ் முதலாவது நகராட்சி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியது

Gaya Raja

Leave a Comment