21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்வதாக அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair கூறினார்.
இந்த ஆண்டு இதுவரை 47,000 சதுர கிலோ மீட்டர்கள் காட்டுத்தீ காரணமாக எரிந்துள்ளன.
நாடளாவிய ரீதியில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 5,000 தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Chile, Costa Rica, Spain, Portugal ஆகிய நாடுகளில் இருந்து மேலும் நூற்றுக்கணக்கான தீயணைப்பு படையினர் கனடாவை எதிர்வரும் நாட்களில் வந்தவடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா முழுவதும் தற்போது 431 காட்டுத் தீ எரிந்து வருகிறது.
அவற்றில் ஒன்று Alberta மாகாணத்தின் Edson நகரை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
Edson நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) 8,400 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
British Colombiaவில் நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Nova Scotiaவில் ஒரு பெரிய தீ கட்டுப்பாட்டை மீறி உள்ளது.