Quebec மாகாணத்தில் காட்டுத்தீயின் காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் பலர் மீண்டும் தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 13 ஆயிரமாக இருந்த இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 4 ஆயிரமாக குறையும் என முதல்வர் François Legault தெரிவித்தார்.
திங்கட்கிழமை (12) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
மாகாணத்தின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை (14) முதல் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்ப முடியும் என அறிவிக்கப்படுகிறது.
Quebecகில், தற்போது 127 தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இவற்றில் 34 தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.