தேசியம்
கட்டுரைகள்

தமிழர்களை சந்தித்தார் Olivia Chow!

Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு இரண்டு வாரங்களில் நடைபெறுகிறது.

Toronto நகர முதல்வர் பதவிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் Olivia Chow, ஞாயிற்றுக்கிழமை (11) தமிழ் மக்களை சந்தித்தார். சுமார் 70 பேர் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் Olivia Chow தனது பிரச்சார உறுதிமொழிகளை முன்வைத்தார். தவிரவும் கலந்து கொண்டவர்களின் சில கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

Toronto கல்விச்சபை உறுப்பினர் நீதன் சான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

Olivia Chow தவிர இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் தமிழர்கள் சந்திப்பு எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

Olivia Chow அரசியலுக்கு புதியவரல்ல.

2014 Toronto நகர முதல்வருக்கு போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்தில் வந்தார். முன்னர் Trinity-Spadina தொகுதியில் புதிய ஜனநாயக கட்சியை 2006 முதல் 2014 வரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1992 முதல் 1998 ஆம் ஆண்டு வரை Metro Toronto நகர சபை உறுப்பினராகவும், 1998 முதல் 2005 வரை Toronto நகர சபை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1985 முதல் 1991 வரை Toronto கல்விச் சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அவர்.

இம்முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு இரண்டு வாரங்கள் மாத்திரம் உள்ள நிலையில், Olivia Chowவை தோற்கடிக்க தன்னால் மட்டுமே முடியும் என்ற கருத்தை நிலைநிறுத்த Mark Saunders முயல்கிறார்.102 வேட்பாளர்கள் களமிறங்கும் இந்த தேர்தலில் கருத்து கணிப்புக்களில் தொடர்ந்தும் Olivia Chow முன்னிலையில் உள்ளார். திங்கட்கிழமை (June 12) வெளியான Forum Research கருத்துக்கணிப்பில் Olivia Chow 35 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். இறுதியாக June 2ஆம் திகதி வெளியான கருத்துக் கணிப்பில் அவருக்கான ஆதரவு 38 சதவீதமாக இருந்தது.

இரண்டாவது இடத்தில் உள்ள Mark Saunders 14 சதவீதமான ஆதரவை மாத்திரம் பெற்றுள்ளார். Anthony Furey 11, Ana Bailao 10, Josh Matlow 9, Mitzie Hunter 7, Brad Bradford 5 என ஏனைய முன்னிலை வேட்ப்பாளர்களின் ஆதரவு நிலை வெளியாகியுள்ளது.

 

*Ramya Sethu, LJI Reporter

Related posts

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

Toronto நகர முதல்வர் பதவி துறப்பும் ஈழத்தமிழரும்

Lankathas Pathmanathan

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

Leave a Comment