கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணைக்கு புலம்பெயர் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணையை நிராகரிக்கும் முடிவை David Johnston செவ்வாய்கிழமை (06) நியாயப்படுத்தினார்.
இந்த விடயத்தில் David Johnston தங்களிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என பல சீன-கனடிய புலம்பெயர் குழுக்கள் புதன்கிழமை (07) வலியுறுத்தின.
இந்த முடிவு குறித்து Bloc Québécois ஏற்பாடு செய்திருந்த புலம்பெயர் குழுக்களின் செய்தியாளர் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
வெளிநாட்டு தலையீடு குறித்த David Johnstonனின் அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கனடா – Hong Kong இணைப்பு என்ற அமைப்பின் தலைவர் இந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
புலம்பெயர் அமைப்புகளை அணுகுவதில் David Johnston தவறிவிட்டார் என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறினார்.