தபால் மூல வாக்களிப்பு பெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் Torontoவில் நிகழ்ந்துள்ளது.
Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் செவ்வாய்கிழமை இரவு (06) நிகழ்ந்தது.
இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட ஏழுவாக்குச் சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக Toronto நகரம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 25 தபால் மூல வாக்களிப்பு பெட்டிகளை இடமாற்றம் செய்ய Toronto நகரம் முடிவு செய்துள்ளது
தபால் மூல June மாதம் 15ஆம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும்.
இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வியாழக்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது.
Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.