தேசியம்
செய்திகள்

தொடர்ந்தும் நானூறுக்கும் அதிகமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது

இதுவரை காணாத காட்டுத்தீ, இந்த ஆண்டு கனடாவில் எதிர்கொள்ள படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் எரியும் காட்டுத்தீ இதுவரை கண்டிராத மிகவும் கடுமையானவை என கனடாவின் அவசர கால தயார் நிலை அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.

அடுத்த சில மாதங்களில், இயல்பை விட அதிகமான தீ சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடரும் கனடாவின் காட்டுத்தீ நிலவரம் குறித்து Bill Blair உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் தகவல் வழங்கினர்.

நாடு முழுவதும் திங்கட்கிழமை(05) பிற்பகல் வரை 424 காட்டுத்தீ எரிந்து வருவதாக தெரியவருகிறது.

இவற்றில் 250 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

இந்த காட்டுத் தீயின் காரணமாக சிறப்பு காற்றின் தர அறிக்கைகளை சுற்றுச்சூழல் கனடா நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கு விடுத்துள்ளது.

Related posts

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

கனடாவில் அனைத்தும் செயலிழந்து விட்டது: Conservative தலைவர்

Lankathas Pathmanathan

கனடாவின் பயண கட்டுப்பாடுகள் மாற்றமடைந்தன!

Leave a Comment