தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் வேட்பாளரை மிரட்டிய சந்தேக நபர் கைது

Toronto நகர முதல்வர் வேட்பாளர்களை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வியாழக்கிழமை (01) மாலை நடைபெற இருந்த Toronto நகர முதல்வர் வேட்பாளர்கள் விவாதம் இரத்து செய்யப்பட்டது.

Toronto நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த விவாதம் இரத்து செய்யப்பட்டது.

இந்த விடயத்தில் தம்மால் முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து 102 நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் காவல்துறையினர் தகவல் அனுப்பினர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக பல வேட்பாளர்கள் தமது பொது நிகழ்ச்சிகளை இடை நிறுத்தினர்.

நகர முதல்வர் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, சந்தேக நபரை தேடி வருவதாக காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த அச்சுறுத்தலுடன் தொடர்புடைய Torontoவை சேர்ந்த 29 வயதான Junior Francois Lavagesse என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (01) இரவு காவல்துறையினர் அறிவித்தனர்.

Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related posts

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

குறைவடையும் வீட்டின் விலை?

Lankathas Pathmanathan

Leave a Comment