Alberta மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெறுகிறது.
மாகாண புதிய ஜனநாயக கட்சி Rachel Notley தலைமையிலும் , United Conservative கட்சி Danielle Smith தலைமையிலும் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன.
இறுதியாக வெளியான கருத்துக் கணிப்பில் United Conservative கட்சி, புதிய ஜனநாயக கட்சியை 49க்கு 46 என்ற ஆசன எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.
இந்த தேர்தலின் முன்கூட்டிய வாக்களிப்பில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டு வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு சனிக்கிழமை (27) இரவு 8 மணி வரை நடைபெறும்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் United Conservative கட்சி 55 சதவீதமான வாக்குகளை பெற்றறு.
இந்த தேர்தலில் United Conservative கட்சி 63 ஆசனங்களை வெற்றி பெற்றது.
புதிய ஜனநாயக கட்சி 24 ஆசனங்களை வெற்றி பெற்றது.