தேசியம்
செய்திகள்

Quebecகில் குடியேற விரும்புபவர்களுக்கு French தெரிந்திருத்தல் அவசியம்?

Quebec மாகாணத்திற்கு குடியேற விரும்புபவர்களுக்கு French மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் என கூறப்படுகிறது.

Quebec மாகாண முதல்வர் François Legault வியாழக்கிழமை (25) இந்த கருத்தை தெரிவித்தார்.

Quebec மாகாணத்திற்கு அனுமதிக்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 60 ஆயிரமாக உயர்த்துவது குறித்து மாகாண முதல்வர் பரிசீலித்து வருகின்றார்.

குடியேற்ற சீர்திருத்தத்தின் பின்னர் இந்த இலக்கு சாத்தியமாகும் என முதல்வர் François Legault கூறினார்.

இந்த குடியேற்ற சீர்திருத்தம் Quebec மாகாணத்திற்கு குடியேற விரும்புபவர்கள் French மொழியில் உரையாட தெரிந்திருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தும் என கூறப்படுகிறது.

Related posts

தமிழ் இளைஞரின் மரணம் – தரம் உயர்த்தப்பட்ட கொலை குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்! 

Gaya Raja

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Leave a Comment