தேசியம்
செய்திகள்

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

கனடா முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் நம்பகமான-பயணிகள் திட்டம் அடுத்த மாதம் மறுசீரமைக்கப்படுகிறது.

நம்பகமான பயணிகள் திட்டத்தை கனடிய மத்திய அரசாங்கம் மறுசீரமைப்பதாக செவ்வாய்க்கிழமை (23) அறிவித்தது.

போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

கோடை பயண காலம் ஆரம்பிக்கும் வேளையில் நம்பகமான-பயணிகள் திட்டத்தை மறுசீரமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் ஆறு பெரிய விமான நிலையங்களில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் Omar Alghabra கூறினார்.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை Toronto, Vancouver, Calgary, Edmonton, Winnipeg, Montreal விமான நிலையங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Related posts

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

மாகாணம் தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயராகும் CUPE

Lankathas Pathmanathan

British Colombiaவில் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசி காலக்கெடு

Lankathas Pathmanathan

Leave a Comment