தேசியம்
செய்திகள்

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது

Liberal அரசாங்கத்தின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Bill C-21 என்ற இந்த சட்டமூலம் வியாழக்கிழமை (18) நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 207 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் பதிவாகின.

சட்டமூலத்திற்கு ஆதரவாக பெரும்பான்மையான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

Bloc Quebecois, NDP, பசுமை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனாலும் Conservative கட்சியுடன் இணைந்து இரண்டு Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இவர்கள் இருவரும் Yukon, Northwest Territories தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிவடைந்தன!

Gaya Raja

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Lankathas Pathmanathan

பிரதமருக்கும் Quebec முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு இரத்து

Lankathas Pathmanathan

Leave a Comment