தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் குறித்த கனடிய பிரதமர் அறிக்கையை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளது.
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (18) வெளியிட்டார்.
கனடிய பிரதமர் விடுத்த அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.
இந்த அறிக்கை இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு உதவியாக அமையாது என இலங்கை வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
May மாதம் 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனம் செய்யும் பிரேரணையை கனடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.