Peel பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை Doug Ford தலைமையிலான Ontario மாகாண அரசாங்கம் வியாழக்கிழமை (18) அறிவித்தது.
இந்த அறிவித்தல் Mississauga, Brampton, Caledon ஆகிய நகரங்கள் இரண்டு ஆண்டுகளில் சுதந்திர நகரங்களாக மாற வழி வகுக்கிறது.
மாநகர விவகாரங்கள் அமைச்சர் Steve Clark இந்த சட்டமூலத்தை சட்டசபையில் அறிவித்தார்.
Mississauga நகரை தனித்த நகரமாக மாற்ற செயல்பட்ட மறைந்த Mississauga நகர முதல்வர் நினைவை குறிக்கும் வகையில் Hazel McCallion சட்டம் என இந்த சட்டமூலம் அழைக்கப்படுகிறது.
இந்த அறிவித்தலை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் Mississauga, Brampton, Caledon நகர முதல்வர்கள் Bonnie Crombie, Patrick Brown, Annette Groves ஆகியோர் கலந்து கொண்டனர்.