கனடியத் தமிழர்கள் ஏழு மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான மருந்துப் பொருட்களை இலங்கை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை நடத்திய நிதி சேர் நடை பவனி ஊடக திரட்டப்பட்ட நிதியில் இருந்து இந்த நன்கொடை புதன்கிழமை (17) வழங்கப்பட்டது.
கல்முனை ஆதார வைத்தியசாலை இயக்குனர் மருத்துவர் இராசராட்ணம் முரளீசன் இந்த மருந்துப் பொருட்களை பெற்றுக் கொண்டார்.
இந்த நிதி சேர் நடை ஊடாக சேகரிக்கப்பட்ட நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்தி, தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு மருந்துப் பொருட்கள் வழங்குவதென திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம், இரண்டாவது தொகுதி மருந்துகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.
புதனன்று மூன்றாவது தொகுதி மருந்துகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.