RCMP அதிகாரி மீது வாகனம் ஒன்றை மோதிய சம்பவத்தில் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
British Columbia மாகாணத்தின் North Cowichan-Duncan RCMP பிரிவில் வெள்ளிக்கிழமை (12) காலை 6:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் காயமடைந்த RCMP அதிகாரியும், சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதில் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
British Columbiaவின் சுயாதீன விசாரணை அலுவலகம், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.