WestJet விமானிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
WestJet நிறுவனமும் சுமார் 1,600 விமானக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிசாங்கமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறித்து தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவுக்குப் பின்னர் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாக தொழிற்சங்கம் கூறுகிறது.