தேசியம்
செய்திகள்

Ottawaவில் OPP அதிகாரிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல்

தலைநகர் Ottawaவிற்கு கிழக்கே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் Ontario மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

Clarence-Rockland நகராட்சியில் உள்ள Bourget கிராமத்தில் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு OPP அதிகாரிகள் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு குறித்த அழைப்புக்கு பதிலளிக்கும் போது மூன்று OPP அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் மூவரும் பதுங்கியிருந்து தாக்கப்பட்டதாக OPP ஆணையர் Thomas Carrique தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 39 வயதானவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு பதிவானது.

Related posts

2024 இன் அதிக வெப்பமான நாள்?

Lankathas Pathmanathan

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

British Columbiaவில் இன்று தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment