தேசியம்
செய்திகள்

இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கு இந்தியா கோரிக்கை?

இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக இரண்டு கனடியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.

கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் கடக்க முயன்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தெற்கு Manitoba உறைந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் கடந்த January மாதம் நிகழ்ந்தது.

இவர்களின் மரணங்கள் மனித கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையதாக நம்புவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள Vancouverரை சேர்ந்த Fenil Patel, Bitta Singh ஆகிய இருவரையும் இந்தியாவிற்கு நாடு கடத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனாலும் இந்த நாடு கடத்தல் உத்தரவை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என கனடிய நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் மூவரை கைது செய்த இந்திய காவல்துறை, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது.

Related posts

காசாவில் கனடியர்கள் காணாமல் போயுள்ளது குறித்து  இஸ்ரேலிய – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாடல்

Lankathas Pathmanathan

கனடாவில் COVID காரணமாக 29,900 மரணங்கள் பதிவு

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment