Ontario மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகியுள்ளார்.
வெற்றிடமாகவுள்ள Toronto நகர முதல்வர் பதவிக்கு Mitzie Hunter போட்டியிடுகிறார்.
நகராட்சி தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் முடிவதற்குள், மாகாண சபை உறுப்பினராக இருக்கும் நகர முதல்வர் வேட்பாளர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
இந்த நிலையில் புதன்கிழமை (10) தனது மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகினார்.
Scarborough-Guildwood மாகாண சபை உறுப்பினராக Mitzie Hunter நான்கு முறை பதவி வகித்தவராவார்.
Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிட இதுவரை 80 வேட்பாளர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) மாலை 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.