February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Ontario Liberal தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமானது.

Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith செவ்வாயன்று தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

Beaches-East York நாடாளுமன்ற உறுப்பினரான இவர், முதலில் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

அதேவேளை Mississauga நகர முதல்வர் Bonnie Crombie இந்த தலைமை போட்டியில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது

Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven Del Duca விலகியிருந்தார்.

இந்த நிலையில் கட்சி உறுப்பினர்கள் November 25, 26 ஆம் திகதிகளில் புதிய தலைவருக்கு வாக்களிக்கவுள்ளனர்

Ontario Liberal புதிய தலைவர் December 2ஆம் திகதி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல்: Torontoவில் தமிழ் பெண் வழக்கறிஞர் கைது!

Gaya Raja

விடுமுறை காலத்தில் ஆயிரக்கணக்கான  பருவகால ஊழியர்களை பணியமர்த்தும் கனடா Post – Purolator !

Gaya Raja

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரவாக வாக்களிக்க Bloc Quebecois தீர்மானம்!

Lankathas Pathmanathan

Leave a Comment