Alberta மாகாணத்தில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை (05) காலை வரை குறைந்தது 78 காட்டுத்தீகள் நடைமுறையில் உள்ளதாக Alberta அவசர மேலாண்மை நிறுவனம் தெரிவிக்கின்றது.
இவற்றில் 19 காட்டுத்தீ கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுத்தீயின் அச்சுறுத்தல் காரணமாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Albertaவில் இந்த ஆண்டில் இதுவரை 348 காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
Ontario, Quebec மாகாணங்கள் இந்த வார இறுதியில் Albertaவிற்கு மொத்தம் 79 தீயணைப்பு வீரர்களை உதவிக்கு அனுப்புகின்றது.