Quebec மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட இரண்டு தீயணைப்பு படையினரை தேடும் பணி தொடர்கிறது.
காணாமல் போன இரண்டு தீயணைப்பு படையினரை தேடும் பணி செவ்வாய்கிழமை (02) இரண்டாவது நாளாக தொடர்கிறது.
திங்கள்கிழமை (01) பிற்பகல் முதல் காணாமல் போன தீயணைப்பு படையினரை தேடும் பணி சிறப்பு வான், தரைவழி மீட்புக் குழுக்களினால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
23 வயதான Christopher Lavoie, 50 வயதான Régis Lavoie ஆகியோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இருவரும் திங்களன்று வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.