சூடானில் அமைதி ஏற்பட கனடா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.
கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், அங்கு கிழக்கு ஆபிரிக்கா முழுவதிலும் உள்ள தலைவர்களைச் சந்தித்து, சூடானில் அமைதி ஏற்பட கனடா முன்னெடுக்கக்கூடிய முயற்சி குறித்து விவாதித்தார்.
சூடானில் ஏற்பட்டுள்ள வன்முறையில் இருந்து தப்பியவர்களிடம் Melanie Joly கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
சுமார் 400 கனேடியர்கள் சூடானில் இருந்து விமானங்களில் வெளியேற்றபட்டுள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.