கனடாவில் உள்ள தற்காலிக சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் அறிமுகப்படுத்துகின்றது
குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Sean Fraser இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.
தற்போது கனடாவில் இருக்கும் சூடானிய தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு ஆதரவாக கனடா அரசாங்கம் புதிய குடியேற்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதாக அவர் அறிவித்தார்.
சூடானில் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என கனடிய அரசாங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.