தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கனடியர்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் புரிந்து கொள்வது அவசியம் என தெரிவிக்கப்படுகிறது
கருவூல வாரியத் தலைவர் Mona Fortier இந்த கருத்தை தெரிவித்தார்.
கனடிய பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை (25) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த நிலையில் கனடிய அரசின் பேச்சுவார்த்தை குழுவின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டும் கடிதமொன்றை கருவூல வாரியத் தலைவர் Mona Fortier வெளியிட்டார்.
பொது ஊழியர்கள், கனேடியர்களுக்கு ஒரு திறந்த கடிதம் என்று அழைக்கப்படும் இந்த கடிதம் திங்கட்கிழமை (24) வெளியிடப்பட்டது.
பேச்சுக்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய அனைத்து சிக்கல்களையும் பொது ஊழியர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என இந்த கடிதத்தில் Mona Fortier வலியுறுத்தினார்.
தொழிற்சங்கத்தின் 560க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில் அரசாங்கம் உடன்பாடுகளை எட்டியுள்ளது என கூறிய அவர் நான்கு முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் கூறினார்.