தொடரும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்தம் கனடாவின் குடிவரவு நடவடிக்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
கனடிய குடிவரவு அமைச்சர் Sean Fraser இந்த எச்சரிக்கையை வெளியிட்டார்.
வியாழக்கிழமை (20) தொடர்ந்தும் இரண்டாவது நாளாக மத்திய பொது சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர், கனடா ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக குடியேற்ற விண்ணப்பங்களில் தாமதங்களை எதிர்கொண்டது.
இந்த வேலை நிறுத்தம் நீடிக்கும் காலத்தைப் பொறுத்து இதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என அமைச்சர்
Sean Fraser கூறினார்.