தேசியம்
செய்திகள்

வாகன விபத்தில் மரணமடைந்த RCMP அதிகாரியின் இறுதி சடங்கு

வாகன விபத்தில் மரணமடைந்த Alberta மாகாண RCMP அதிகாரியின் இறுதி சடங்கு வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

32 வயதான Constable Harvinder Singh Dhami என்ற RCMP அதிகாரி Edmonton நகருக்கு வடகிழக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் மரணமடைந்தார்.

April மாதம் 10ஆம் திகதி அதிகாலை அவரது வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் நிகழ்ந்த விபத்தில் அவர் மரணமடைந்தார்.

மற்றொரு RCMP அதிகாரிக்கு உதவ சென்றபோது, அதிகாலை 2 மணியளவில் அவரது வாகனம் தடுப்புச் சுவரில் மோதியது.

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி சடங்கில் மரணமடைந்த RCMP அதிகாரியை அவரது மனைவி, சகோதரர், தாய், நண்பர்கள் என பலரும் நினைவு கூர்ந்தனர்.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை Ontarioவில் 3,000ஐ தாண்டலாம் !

Lankathas Pathmanathan

Leave a Comment