கனடாவின் பொதுச் சேவை கூட்டணி சமரசத்திற்கு தயாராக வேண்டும் என கருவூல வாரிய தலைவர் Mona Fortier தெரிவித்தார்.
கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.
மத்திய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு பொதுச் சேவை கூட்டணிக்கு சமரசம் அவசியமானது என அவர் கூறினார்.
சமீபத்தைய நாட்களில் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாக கருவூல வாரிய தலைவர் Mona தெரிவித்தார்.
இந்த நிலையில் பொதுச் சேவை கூட்டணி ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அவர் ஏமாற்றம் வெளியிட்டார்.
வேலை நிறுத்தம் மேற்கொள்வதற்கான ஊழியர்களின் உரிமைகளை அங்கீகரித்து மதிப்பதாக கூறிய அவர்,
சமரசம் செய்வதற்கான அர்ப்பணிப்பின் மத்தியில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவது அவசியம் என Mona Fortier தெரிவித்தார்.