2021 பொதுத் தேர்தலுக்கு முன்னர் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் சீனாவின் Toronto தூதரக அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
Markham-Unionville தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Bob Saroyaவை சீனாவின் Toronto தூதரக அதிகாரி அச்சுறுத்தியது தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற சீன வெளியுறவுத் தலையீடு தொடர்பான நாடாளுமன்றக் குழு விசாரணையில் இந்த தகவல் வெளியானது.
இந்த விசாரணையில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Cooper இந்த தகவலை வெளியிட்டார்.
2021 தேர்தலுக்கு பின்னர் Bob Saroya நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க மாட்டார் என சீனாவின் Toronto தூதரக அதிகாரி குறுஞ்செய்தியில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.
2019 பொதுத் தேர்தலில் Bob Saroya, Markham-Unionville தொகுதியை 49 சதவீதமான வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனாலும் 2021 பொதுத் தேர்தலில் Liberal கட்சியின் வேட்பாளர் Paul Chiang 49 சதவீத வாக்குகளால் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் Bob Saroya, 38 சதவீதம் வாக்குகளை மாத்திரம் பெற்றிருந்தார்.