தேசியம்
செய்திகள்

புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில்71 வீடுகள் சேதம்

Ontario மாகாணத்தின் Vaughan நகரில் புதிய வீட்டு மனை தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 71 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சீர்படுத்த முடியாத வெப்ப சேதம் காரணமாக இந்த வீடுகளில் பல இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக Vaughan தீயணைப்பு, மீட்பு சேவையின் துணை தீயணைப்புத் தலைவர் தெரிவித்தார்.

புதன்கிழமை (12) ஏற்பட்ட இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் காயமடைந்த ஒரு தீயணைப்பு வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தவிரவும் பொதுமக்கள் எவரும் இந்த தீ காரணமாக காயமடையவில்லை.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Related posts

கனடாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சராசரியை விட குறைவான பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

LGBTQ சமூகத்திற்கு எதிரான கருத்துக்கு ரஷ்ய தூதரை பதிலளிக்க அழைக்கும் கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment