கனடிய வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கனடாவின் பொது சேவை கூட்டணி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இதன் மூலம் 120 ஆயிரத்திற்கும் அதிகமான பொது ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
கனேடிய வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தங்களில் ஒன்றாக இது மாறும் நிலை தோன்றியுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் நாடாளாவிய ரீதியில் பல பகுதிகளில் சேவை இடையூறுகளை உருவாக்கும் சாத்தியக்கூறும் தோன்றியுள்ளது.
கடந்த வாரம் ஏற்கனவே, 35 ஆயிரம் கனடிய வருவாய் திணைக்கள ஊழியர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் ஐந்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 155 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது ஊழியர்கள் இந்த வார இறுதிக்குள் சட்டப்பூர்வ வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.