February 23, 2025
தேசியம்
செய்திகள்

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Ontario மாகாணத்தின் Markham நகர பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை, ஒருவர் தனது வாகனத்தால் தாக்க முனைந்த சம்பவம் குறித்து கனடியத் தமிழர் பேரவை – CTC – தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (06) நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேக நபரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (07) கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து கனடியத் தமிழர் பேரவை திங்கட்கிழமை (10) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

CTC Media Release – April 10 2023

இந்த சம்பவத்தில் Toronto வாசியான 28 வயதான சரன் கருணாகரன் கைது செய்யப்பட்டதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர், Markham நகரில் Denison & Middlefield சந்திப்பில் உள்ள மசூதியில் வழிபாடு செய்பவர்கள் நோக்கி வாகனங்களை செலுத்தியதாகவும், அச்சுறுத்தல் வார்த்தைகளை தெரிவித்ததாகவும், இன அவதூறுகளை உள்ளடக்கிய கருத்துக்களை தெரிவித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

புனித மாதத்தில் அமைதியான முறையில் மதக் கடமைகளை கடைப்பிடிக்கும் நபர்களுக்கு தீங்கு செய்ய முற்படுவார்கள் குறித்து கனடியத் தமிழர் பேரவை தனது அறிக்கையில் அதிருப்தி தெரிவித்துள்ளது.

வெறுப்புச் செயல்களுக்கு எமது சமூகத்தில் இடமில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை, இதுபோன்ற கொடூரமான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.

 

Related posts

June மாத வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 24 சதவீதம் குறைந்தது

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

வாக்குச்சாவடிகளில் முகமூடி விதிகள் அமுல்படுத்தப்படும்: கனேடிய தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Leave a Comment