குறைந்தது ஐந்து கனடிய மாகாணங்களில் பனி, மழை, இடியுடன் கூடிய மழை போன்ற கால நிலைகள் இந்த வாரம் எதிர்வு கூறப்படுகிறது.
இதன் மூலம் Manitoba முதல் PEI வரையிலான பல பகுதிகள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
Winnipegகிற்கு தெற்கே உள்ள சமூகங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா குளிர்கால புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அங்கு வியாழக்கிழமை (06) காலை வரை 15 முதல் 25 சென்டி மீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
Ontarioவில் Sault Ste Marie, Sudbury உட்பட சமூகங்கள் Ottawa வரை உறைபனியை எதிர்கொள்கின்றன.