தேசியம்
செய்திகள்

மற்றொரு booster தடுப்பூசி பெறுவதை பல கனடியர்கள் தற்காலிகமாக நிறுத்தலாம்

மற்றொரு COVID booster தடுப்பூசியை பெறுவதை பல கனடியர்கள் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த அறிவுறுத்தலை செவ்வாய்க்கிழமை (04) வெளியிட்டது.

குறைந்தது ஒரு COVID தடுப்பூசி booster பெற்ற ஆரோக்கியமான, முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மீண்டும் booster தடுப்பூசி பெறுவதை தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.

COVID தடுப்பூசி பெற்று booster தடுப்பூசியை பெறாதவர்கள், முதல் booster தடுப்பூசியை விரைவில் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனாலும் COVID காரணமாக கடுமையான நோய் அபாயத்தில் உள்ள கனடியர்கள் கூடுதல் booster தடுப்பூசியை பெற வேண்டும் என NACI பரிந்துரைக்கிறது.

இதில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், முதியோர், சிக்கலான மருத்துவ தேவைகள் உள்ளவர்களும் அடங்குகின்றனர்.

Related posts

கனடா – இந்தியா பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Calgary வெடிப்பில் குறைந்தது 10 பேர் காயம்

Lankathas Pathmanathan

Quebec முதியோர் இல்ல கட்டுமான விபத்தில் 5 பேர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment