ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கான ஆதரவை கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (04) கனடிய பிரதமர் Justin Trudeau, உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyy உடன் உரையாடினார்.
இந்த உரையாடலின் போது உக்ரைனுக்கான கனடாவின் ஆதரவை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு தலைவர்களும் உக்ரைனின் தற்போதைய தேவைகள், கனடாவின் ஆதரவு, இராணுவம், நிதி, மனிதாபிமான உதவி உள்ளிட்ட விடயங்கள் குறித்து உரையாடினர்.
இந்த உரையாடலின் போது கனடாவின் 2.4 பில்லியன் டொலர் உதவிக்கு உக்ரேனிய ஜனாதிபதி மீண்டும் நன்றி தெரிவித்தார்.