Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழர் ஒருவர் வேட்பாளராக பதிவாகியுள்ளார்.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திங்கட்கிழமை (03) முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
Toronto நகர முதல்வர் பதவிக்காக திங்களன்று பலர் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவர்களில் கிரி வடிவேலு என்ற தமிழரும் அடங்குகிறார்.
இவர் முன்னர் Scarborough Centre தொகுதியில் நகரசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவராவார்.
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
செவ்வாய்க்கிழமை (04) மாலை வரை மொத்தம் 31 பேர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.