பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கனடாவில் அதிகரித்து வருவதாக அண்மையில் வெளியான புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண் கொலைகள் (femicides) என அழைக்கப்படும் பெண்கள், சிறுமிகளிடையே கொலை வழக்குகள் கனடா முழுவதும் அதிகரித்து வருகின்றன.
2018 முதல் 2020 வரை 850க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கை விவரிக்கிறது.
48 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் என்ற அடிப்படையில் கொலைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.