தேசியம்
செய்திகள்

St. Lawrence ஆற்றில் இருந்து எட்டு சடலங்கள் மீட்பு: சட்டவிரோத குடியேற்றம்?

கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டிய Akwesasneவின் Mohawk பிரதேச கடற்பரப்பில் இருந்து எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

St. Lawrence ஆற்றில் இருந்து வியாழன் (30) வெள்ளி (31) கிழமைகளில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்கள் ருமேனிய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்கள் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாவும் காவல்துறையினர் கூறினர்.

அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படாத இந்த உடல்கள் Akwesasne பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.

இது கனடாவில் Quebec, Ontario மாகாணங்களையும் அமெரிக்காவின் New York மாநிலத்தையும் அண்டிய ஒரு Mohawk பிரதேசமாகும்.

இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குகின்றனர்.

மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் ருமேனிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் கனடிய குடியுரிமை பெற்றவர்கள் என தெரியவருகிறது

காணாமல் போன மற்றொரு நபரைத் தேடும் முயற்சியின் விளைவாக இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

Akwesasne அதிகாரிகள் மாகாண காவல்துறையினரின் உதவியுடன் மேலும் பாதிக்கப்பட்டவர்களை தேடும் முயற்சியை தொடர்கின்றனர்

கடந்த வாரம் Quebec மாகாணத்தின் Roxham வீதி எல்லை மூடப்பட்டதற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்புகள் இல்லை என புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுக்கும் கனேடிய பிரதமர் Justin Trudeauவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, New York, Quebec இடையிலான அதிகாரப்பூர்வமற்ற நுழைவுப் புள்ளியான Roxham வீதி எல்லை கடந்த சனிக்கிழமை (25) காலை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Related posts

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan

பணிக்குத் திரும்பிய LCBO ஊழியர்கள்

Lankathas Pathmanathan

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

Leave a Comment