தேசியம்
செய்திகள்

Ontarioவில் அதிகரிக்கும் குறைந்தபட்ச ஊதியம்

Ontario மாகாண குறைந்தபட்ச ஊதியம் எதிர்வரும் October மாதம் முதல் அதிகரிக்கவுள்ளது.

October மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 16 டொலர் 55 சதமாக அதிகரிக்கும் என வெள்ளிக்கிழமை (31) அறிவிக்கப்பட்டது.

அதேவேளை April 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் குறைந்தபட்ச ஊதியம் 1 டொலர் 10 சாதத்தால் அதிகரிக்க உள்ளது

இதன் மூலம் 15 டொலர் 55 சதமாக உள்ள குறைந்தபட்ச ஊதியம் 16 டொலர் 65 சதமாக அதிகரிக்கிறது.

2022ஆம் ஆண்டில் 6.8 சதவீதம் உயர்ந்த நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

மத்திய அரசாங்கம், 2021 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்திற்கு $15 என்ற குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தது.

அதனை தொடர்ந்து பணவீக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசாங்கம் அதை அதிகரித்தும் வருகிறது

ஒவ்வொரு ஆண்டும் April 1ஆம் திகதி இந்த அதிகரிப்பு நடைமுறைக்கு வருகிறது

Related posts

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் Jason Kenney

Lankathas Pathmanathan

மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய வங்கி

Lankathas Pathmanathan

கனடியர் அயர்லாந்தில் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment