Manitobaவில் புதன்கிழமை (29) இரவு நிகழ்ந்த விபத்தில் நான்கு இளைஞர்கள் பலியானதுடன் மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு பயணிகள் வாகனம் பார ஊர்தியுடம் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
பயணிகள் வாகனத்தில் ஐந்து இளைஞர்கள் பயணித்ததாக காவத்துறையினர் தெரிவித்தனர்.
18 வயதான ஆண் சாரதியும், 17 வயதுடைய இரண்டு ஆண்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 18 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
15 வயது பெண் ஒருவர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பார ஊர்தியின் சாரதியான 30 வயது இளைஞர் இந்த விபத்தில் காயமடையவில்லை
RCMP தடயவியல் பிரிவு இந்த விபத்து குறித்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.