சிரியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை RCMP விசாரித்து வருவதாக தெரியவருகிறது.
இதற்காக RCMP அதிகாரிகள் தற்போது வடகிழக்கு சிரியாவில் தங்கியுள்ளதாக தெரியவருகிறது.
தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை மீண்டும் கனடாவிற்கு அழைத்து வருவதற்காக அவர்களிடம் RCMP விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சிரியாவில் இருந்து ஏழு கனேடிய பெண்களையும் 19 குழந்தைகளையும் திருப்பி அழைக்க கனடிய வெளிவிவகார அமைச்சு ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் தடுப்பு முகாமில் உள்ள கனேடிய பெண்களை மட்டுமே இதுவரை மூன்று RCMP அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
கனடாவுக்கு திரும்பும் நிலையில் இந்த பெண்கள் பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என RCMP அதிகாரிகள் இந்த விசாரணையின் போது எச்சரித்துள்ளனர்.
அதேவேளை சிரியாவில் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நான்கு கனேடிய ஆண்களை மீண்டும் கனடாவுக்கு அழைத்து வர கனடிய வெளிவிவகார அமைச்சு ஒப்புக்கொள்ளவில்லை.
இவர்கள் ISIS அமைப்பில் இணைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.