தேசியம்
செய்திகள்

சட்ட நடவடிக்கை முன்னெடுக்கும் Han Dong

சீன அரசுடனான தொடர்பு குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் Han Dong சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளார்.

2021 இல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களின் விடுதலையை தாமதப்படுத்துவது குறித்து சீன இராஜதந்திரி ஒருவரிடம் பேசியதாக கூறப்படும் ஊடக அறிக்கை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய செய்தியறிக்கைகளை வெளியிட்ட Global News, அதன் தாய் நிறுவனமான Corus Entertainment ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து Liberal கட்சியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் Han Dong கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

Related posts

சுகாதாரப் பாதுகாப்பு இடமாற்றங்களை அதிகரிக்கத் தயாராக உள்ளோம்: சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan

September மாதம் பாடசாலைக்கு திரும்புவதற்கு Ontario தயாராக இருக்கும்!!

Gaya Raja

ஆரம்பமானது அமெரிக்க அதிபரின் முதலாவது கனடிய பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment