தேசியம்
செய்திகள்

இஸ்ரேலிய இராஜதந்திரிகள் கனடாவில் வேலை நிறுத்தம்

கனடாவில் உள்ள இஸ்ரேலிய இராஜதந்திரிகள் திங்கட்கிழமை (27) வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நாட்டின் நீதித்துறை அமைப்பை மாற்றியமைக்கும் பிரதமர் Benjaminn Netayahuவின் திட்டம் குறித்து இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களுக்கு வேலை நிறுத்தத்தை முன்னெடுக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து இந்த நடவடிக்கையில் கனடாவில் உள்ள இஸ்ரேலிய இராஜதந்திரிகள் ஈடுபட்டனர்.

திங்களன்று பல மணி நேரங்களாக, Ottawaவில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும், Toronto, Montreal நகரங்களில் உள்ள அதன் துணை தூதரகங்களும் அவசர சேவைகளை மட்டுமே வழங்கின.

ஆனாலும் திங்கள் பிற்பகல் பிரதமர் Benjaminn Netayahu தனது திட்டத்தில் தாமதத்தை அறிவித்த நிலையில் , தூதரகம் அது நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்தது.

இந்த நிலையில் இஸ்ரேலின் நீதித்துறை சீர்திருத்தத்தில் கனடா அக்கறை கொண்டுள்ளது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார்.

Related posts

Fiona புயலின் விளைவாக குறைந்தது மூவர் மரணம்

Lankathas Pathmanathan

வெளிநாட்டு தலையீடுகள் குறித்த பொது விசாரணை May இறுதிக்குள் தீர்மானிக்கப்படும்

Lankathas Pathmanathan

Saskatchewan கத்தி குத்து வன்முறை – தொடர்ந்து தேடப்படும் சந்தேக நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment