February 23, 2025
தேசியம்
செய்திகள்

Ontario வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டம்!

2025 இல் வரவு செலவுத் திட்டத்தை சம நிலைப்படுத்துவதை Ontario அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Ontario மாகாண வரவு செலவு திட்டம் வியாழக்கிழமை (23) மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Doug Ford அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் Peter Bethlenfalvy சமர்ப்பித்தார்

Ontario மாகாணத்தின் வரலாற்றில் மிகப்பெரிய வரவு செலவு திட்டமாக 204.7 பில்லியன் டொலர் வரவு செலவு திட்டம் வியாழனன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இது கடந்த ஆண்டு செலவினத்தை விட 6 பில்லியன் டொலருக்கும் அதிகமானதாகும்.

இந்த நிதித் திட்டத்தில் சுமார் 81 பில்லியன் டொலர் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்விக்காக 34.7 பில்லியன் டொலர்கள், பிற திட்டங்களுக்கு 38.1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் Ontario வின் பற்றாக்குறை சுமார் 2.2 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.

இந்த எண்ணிக்கை 2022 வரவு செலவு திட்டத்தில் சுமார் 17.7 பில்லியன் டொலர்களாக கணிக்கப்பட்டது.

2023-2024 இல் 1.3 பில்லியன் டொலர் பற்றாக்குறையை அரசாங்கம் கணித்துள்ளது.

2024-2025 ல் வரவு செலவு திட்ட உபரியாக 200 மில்லியன் டொலர்கள் கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment