February 22, 2025
தேசியம்
செய்திகள்

February மாதத்தில் பணவீக்கம் குறைந்தது

பணவீக்கத்தின் வருடாந்த அதிகரிப்பு வேகம் கடந்த மாதம் குறைந்துள்ளது.

February மாதத்தில் பணவீக்கம் 5.2 சதவீதமாக குறைந்தது

ஆய்வாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த மாதம் பணவீக்கத்தின் வருடாந்த வேகம் குறைவடைந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

இதன் மூலம் 2020ஆம் ஆண்டின் April மாதத்தின் பின்னர் மிகப்பெரிய சரிவை வருடாந்த பணவீக்கம் பதிவு செய்தது

February மாதத்தில் அதன் நுகர்வோர் விலைக் குறியீடு, முந்தைய ஆண்டை விடவும் 5.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணவீக்கத்தின் வருடாந்த வேகம் குறைந்துள்ள போதிலும், மளிகைப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

February மாதம் உணவுப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது தொடர்ந்து ஏழாவது மாதம் பதிவாகும் அதிகரிப்பாகும்.

Related posts

2024 Stampede நிகழ்வில் காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

Leave a Comment