December 12, 2024
தேசியம்
செய்திகள்

Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை!

Quebec மாகாணத்தின் Old Montreal தீ விபத்தில் 6 பேரை காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை (16) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குறைந்தது ஒருவர் பலியாகினார்.

கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரை அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இவர்கள் தொடர்ந்தும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என திங்கட்கிழமை (20( நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Montreal காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கட்டிடத்தில் இருந்து ஒருவரின் உடலை மீட்பு குழுவினர் மீட்டெடுத்தனர்.

இவரது அடையாளத்தை உறுதிப்படுத்தாத அதிகாரிகள் அவர் ஒரு பெண் என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து கடந்த வாரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்பது பேரில் இருவர் தொடர்ந்தும் அவசர பிரிவில் உள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

Related posts

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் 18 பேர் கைது

Lankathas Pathmanathan

தொடர் கொலையாளி Robert Pickton சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment